Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துார் சீரணி அரங்கம் பொலிவு பெறுமா

திருப்புத்துார் சீரணி அரங்கம் பொலிவு பெறுமா

திருப்புத்துார் சீரணி அரங்கம் பொலிவு பெறுமா

திருப்புத்துார் சீரணி அரங்கம் பொலிவு பெறுமா

ADDED : செப் 05, 2025 11:48 PM


Google News
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பொது நிகழ்ச்சிக்கு மேடையாக பயன்பட்ட சீரணி அரங்கத்தை சீரமைத்து பயன்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்புத்துாரில் 1975 ல் கீழரத வீதியில் சீரணி அரங்கம் கட்டப்பட்டது. அப்போது திருப்புத்துார் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு அங்கமாக இருந்ததால் ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் இருந்தது.

பின்னர் பேரூராட்சி தனித்து இயங்கிய போதும் நிர்வாகம் மாற்றப்படவில்லை. இங்கு அரசியல்,தனியார் நிகழ்ச்சிகள் கட்டணம் செலுத்தி நடத்த வசதியாக இருந்தது.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.ஜெ., உள்ளிட்ட பலர் பேசிய மேடையாகும்.எவ்வளவு கூட்டம் கூடினாலும் போக்குவரத்திற்கு இடையூறின்றி நடந்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி இந்த அரங்கம் சிதிலமடைந்து பயனற்று உள்ளது.

தற்போது திருப்புத்துார் நகரில் பொதுக் கூட்ட அரங்கம் என்று எதுவும் இல்லை. இதனால் நகரின் போக்குவரத்து சந்திப்புக்களில் கூட்டம் நடத்த அனுமதித்து விட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

இதனால் பொதுமக்கள் சீரணி அரங்கத்தை பேரூராட்சி நிர்வாகம் ஒலி, ஒளி, பேன் வசதியுடன் விரிவுபடுத்தி சீரமைத்து அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், முக்கிய நிகழ்ச்சிகளை இங்கு மட்டுமே நடத்த அனுமதிக்கவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us