/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஒதுங்கி நிற்க மரமில்லை பசுமை நகராகுமா சிங்கம்புணரி ஒதுங்கி நிற்க மரமில்லை பசுமை நகராகுமா சிங்கம்புணரி
ஒதுங்கி நிற்க மரமில்லை பசுமை நகராகுமா சிங்கம்புணரி
ஒதுங்கி நிற்க மரமில்லை பசுமை நகராகுமா சிங்கம்புணரி
ஒதுங்கி நிற்க மரமில்லை பசுமை நகராகுமா சிங்கம்புணரி
ADDED : ஜூன் 19, 2025 02:37 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் பெருகிவரும் குடியிருப்பு, கட்டுமானங்களால் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வெயிலுக்கு ஒதுங்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பேரூராட்சியின் அனைத்து பகுதி சாலை ஓரங்களிலும் மரங்கள் அதிக அளவில் இருந்தன. நுாறு ஆண்டுகளைக் கடந்த மரங்களும் இருந்தன. சாலை விரிவாக்கம், பெருகிவரும் குடியிருப்பு, கட்டுமானங்கள் காரணமாக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு மரங்கள் இல்லாத பேரூராட்சியாக சிங்கம்புணரி மாறி விட்டது.
சமூக ஆர்வலர்கள் சில இடங்களில் ஒரு சில மரங்களை நடவு செய்து வளர்த்து வருகின்றனர். தெருக்களில் கூட மரங்கள் இல்லாத நிலையில் கோடையில் வெயிலுக்கு ஒதுங்க நிழல் இல்லாத நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நகர் முழுவதும் சாத்தியக்கூறு உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து நகரை பசுமை நகராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.