/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குழாயை திறந்தால் காற்று தான் வருது தவிப்பில் கொண்டைக்காடு மக்கள் குழாயை திறந்தால் காற்று தான் வருது தவிப்பில் கொண்டைக்காடு மக்கள்
குழாயை திறந்தால் காற்று தான் வருது தவிப்பில் கொண்டைக்காடு மக்கள்
குழாயை திறந்தால் காற்று தான் வருது தவிப்பில் கொண்டைக்காடு மக்கள்
குழாயை திறந்தால் காற்று தான் வருது தவிப்பில் கொண்டைக்காடு மக்கள்
ADDED : செப் 17, 2025 02:34 AM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே குழாய் இருந்தும் தண்ணீர் வராததால் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் மணலுார் ஊராட்சி கேசம்பட்டிக்கு உட்பட்ட கொண்டைக்காடு பகுதி மக்களுக்காக பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் சரிவர தண்ணீர் வரவில்லை. பக்கத்து தெரு, தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு முன்பாக ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில் அப்போதாவது தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அப்பகுதியைச் சேர்ந்த ஏ.சரவணன் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு 5 ஆண்டுகளாகவே குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று பக்கத்தில் உள்ள ஒரு குழாயில் தண்ணீர் பிடித்த போது தண்ணீரில் புழுக்கள் நெளிந்தது.
இதனால் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்கள் பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.