/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்பாச்சேத்தியில் களை கட்டிய நெல் அறுவடை * செயின் வண்டிகளுக்கு தட்டுப்பாடுதிருப்பாச்சேத்தியில் களை கட்டிய நெல் அறுவடை * செயின் வண்டிகளுக்கு தட்டுப்பாடு
திருப்பாச்சேத்தியில் களை கட்டிய நெல் அறுவடை * செயின் வண்டிகளுக்கு தட்டுப்பாடு
திருப்பாச்சேத்தியில் களை கட்டிய நெல் அறுவடை * செயின் வண்டிகளுக்கு தட்டுப்பாடு
திருப்பாச்சேத்தியில் களை கட்டிய நெல் அறுவடை * செயின் வண்டிகளுக்கு தட்டுப்பாடு
ADDED : ஜன 03, 2024 06:15 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் நெல் அறுவடை தொடங்கியுள்ளதையடுத்து இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்புவனம் தாலுகாவில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சொட்டதட்டி, கலியாந்லுார், மடப்புரம், மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நான்காயிரம் எக்டேரில் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் விவசாயம் நடைபெறும். வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் ஏனாதி, கணக்கன்குடி , மஞ்சள்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தான் நெல் நடவை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை மூவாயிரத்து 500 எக்டேரில் நெல்நடவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ 50, கர்நாடக பொன்னி, கல்சர் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்கள் இப்பகுதியில் நடவு செய்யப்படுகின்றன. 90 நாட்கள் முதல் 120 நாட்களில் நெல் விளைச்சல் கண்டு விடும். ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். மோட்டார் பம்ப்செட் விவசாயிகள் பலரும் ஆகஸ்ட் கடைசியிலேயே நெல் நடவு செய்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக திருப்பாச்சேத்தி பகுதியில் முற்றிய நெல் கதிர்கள் அப்படியே வயலில் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கி விட்டன. இதனையடுத்து திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.
விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில்: மணிக்கு மூவாயிரத்து 200 ரூபாய் வாடகை, ஒரு மணி நேரத்தில் அறுவடை முடிந்து விடும். வயல்கள் முழுவதும் சகதியாக இருப்பதால் இரண்டு மணி நேரமாகிறது. ஏற்கனவே செலவு அதிகரித்துள்ள நிலையில் அறுவடை செலவும் கூடுதலாக சேர்ந்துள்ளது. ஏக்கருக்கு 35 முதல் ஐம்பது ( ஒரு மூடை 67கிலோ) மூடை வரை நெல் கிடைக்கும் .கதிர்கள் சாய்ந்ததால் விளைச்சலும் குறைய வாய்ப்புண்டு, என்றார்.