/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் திருப்புவனத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்புவனத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்புவனத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்புவனத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மே 13, 2025 07:25 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அழுத்தம்தாங்காமல் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் 18 வார்டுகளில் குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
திருப்புவனம் வைகை ஆற்றில் இரண்டு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்குஇருந்து தலா பத்து லட்சம்லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
குழாய்கள் பதிக்கும் பணி முறையாக நடைபெற வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகரில் 46 கி.மீ., சுற்றளவிற்கு குழாய்கள் பதித்துள்ளனர். காற்று வெளியேற்றும் அமைப்பு (கேட் வால்வு) இல்லாததால் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று அடிக்கடி குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி ஆறாக ஓடியது. கோடை காலம் தொடங்கி குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், குழாய்கள் சேதமடைந்த இடத்தை உடனடியாக சரி செய்யாமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
நேற்று காலையில் உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவில் குழாய்கள் சேதமடைந்து இரண்டு மணி நேரமாக தண்ணீர் வெளியேறிய நிலையில் அதனை சரிசெய்ய முன்வரவில்லை. இதனால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.