Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் வைகை கரையில் வாக்காளர் அட்டைகள் வீச்சு

திருப்புவனம் வைகை கரையில் வாக்காளர் அட்டைகள் வீச்சு

திருப்புவனம் வைகை கரையில் வாக்காளர் அட்டைகள் வீச்சு

திருப்புவனம் வைகை கரையில் வாக்காளர் அட்டைகள் வீச்சு

ADDED : செப் 11, 2025 04:00 AM


Google News
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையை ஒட்டி ஆற்றினுள் மக்களுக்கான குளியல் தொட்டி உள்ளது. சிலர் குளிக்க சென்ற போது தொட்டியின் எதிர்புறம் பாப்பாகுடி, வெங்கட்டி, ஏனாதி, கணக்கன்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கான 15க்கும் மேற்பட்ட புதிய வாக்காளர் அட்டைகள் கிடந்தன.

தகவலறிந்த போலீசார் அடையாள அட்டைகளை சேகரித்து சென்றனர். ஆக.,29ல் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருந்தன.

தாலுகா அலுவலகத்தினுள் இருந்து சிலர் திருடி சென்று வைகை ஆற்றில் வீசியதாக தாசில்தார் விஜயகுமார் புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்தும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் அலைபேசிகளை ஆய்வு செய்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் போலீசார் மனுக்கள் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தவர்களை விசாரணை என்ற பெயரில் மிரட்டி வருகின்றனர்.

இதனால் நேற்று காலையிலேயே பலரும் பார்த்தும் யாரும் தகவல் கூட சொல்லவில்லை. காலை 10:00 மணிக்கு மேல்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று அடையாள அட்டைகளை சேகரித்து சென்றுள்ளனர். தகவல் கொடுத்தவர்களின் அலைபேசிகளையும் போலீசார் வாங்கி படம்,வீடியோ பதிவு உள்ளனவா என ஆய்வு செய்துள்ளனர்.

தாசில்தார் ஆனந்தபூபாலன் கூறுகையில் :எனக்கு எதுவும் தெரியாது விசாரிக்கின்றேன், என்றார்.

போலீசார் தரப்பில் கூறுகையில் வாக்காளர் அடையாள அட்டை கிடந்தது உண்மை. யார் வீசியது என விசாரிக்கிறோம், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us