ADDED : செப் 04, 2025 11:38 PM
திருப்புத்துார்: கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றது.
பங்கேற்ற 16 மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.48 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிச் செயலர் வெங்கடாச்சலம்,தலைவர் வெள்ளையன், பொருளாளர் அம்மையப்பன், தலைமையாசிரியர் கமலம் ஆகியோர் பாராட்டினர்.