/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிக்ரியில் செப்.26, 27ல் பார்வையாளர்கள் தினம் சிக்ரியில் செப்.26, 27ல் பார்வையாளர்கள் தினம்
சிக்ரியில் செப்.26, 27ல் பார்வையாளர்கள் தினம்
சிக்ரியில் செப்.26, 27ல் பார்வையாளர்கள் தினம்
சிக்ரியில் செப்.26, 27ல் பார்வையாளர்கள் தினம்
ADDED : செப் 20, 2025 11:48 PM
காரைக்குடி: காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனமான சிக்ரியில் செப்.26, 27 பார்வையாளர் தினமாகும். அன்று அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 37 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக காரைக்குடி சிக்ரி நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டுதோறும், சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன நாளை நினைவு கூறும் விதமாக செப்.26 பார்வையாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு, 84 வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு செப்.26 மற்றும் 27 இரு நாட்கள் பார்வையாளர் தினம் நடைபெறுகிறது.
காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர், பொதுமக்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை நேரடியாக காணலாம். உலோக அரிமானம் தடுப்பு, புராண மற்றும் தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோகமான ரசாயனங்கள், துாய நிலையான ஆற்றல், மின்வேதியியல் உணரிகள், மின்வேதியியல் துறைக்கான நவீன கனிம மூலப்பொருட்கள், மின் கரிம மற்றும் கனிம வேதியியல், நோய்க் கிருமிகளை ஆராய பயன்படும் நவீன பயோ சென்சார்கள், மின்முலாம் பூசுதல் மற்றும் நானோ மின் வேதியியல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள் செயல் விளக்க முறைகள் மற்றும் வண்ணப் படங்கள் மூலம் காட்சியாக விளக்கப்பட உள்ளது.