/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வரத்து கால்வாய் அடைப்பால் கிராம சாலை துண்டிப்பு: ↓பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்புவரத்து கால்வாய் அடைப்பால் கிராம சாலை துண்டிப்பு: ↓பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
வரத்து கால்வாய் அடைப்பால் கிராம சாலை துண்டிப்பு: ↓பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
வரத்து கால்வாய் அடைப்பால் கிராம சாலை துண்டிப்பு: ↓பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
வரத்து கால்வாய் அடைப்பால் கிராம சாலை துண்டிப்பு: ↓பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 21, 2024 04:34 AM

சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு தி.சூரக்குடி மட்டுமின்றி சொக்கம்பட்டி, நங்கம்பட்டி பூவான்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சொக்கம்பட்டி, நங்கம்பட்டி பூவான்டிபட்டி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பைபாஸ் பகுதியை ஒட்டிய சாலையை பள்ளிக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர். இச்சாலையானது கடந்த சில வருடங்களுக்கு முன் மண்சாலையாக அமைக்கப்பட்டது.
இச்சாலையின் நடுவில் வரத்து கால்வாய் பாலம் உள்ளது.இந்த பாலத்தில்கருவேல மரங்கள் மற்றும் குப்பை அடைத்து கொண்டதாலும், கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் அடைக்கப்பட்டதாலும் தண்ணீர் செல்ல வழி இல்லை.
இதனால் மண் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலையே கரைந்து போனதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சாலையை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து கணேசன் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஆர்.ஜி.எஸ்.,திட்டத்தின் கீழ் இச்சாலை போடப்பட்டது.கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வந்தனர்.
கண்மாய்க்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதாலும், தொடர் கனமழையாலும் சாலை அரிக்கப்பட்டு சாலை காணாமல் போனது. குறுகிய இந்த சாலையை கடக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
உடனடியாக பாலத்தை பராமரிப்பதோடு வரத்து கால்வாய் மற்றும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.