/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் 'சஸ்பெண்ட்' வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் 'சஸ்பெண்ட்'
வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் 'சஸ்பெண்ட்'
வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் 'சஸ்பெண்ட்'
வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 22, 2025 03:58 AM
சிங்கம்புணரி: வி.ஏ.ஓ., கையெழுத்தை போட்ட கிராம உதவியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதுார் அருகே கரிசல்பட்டி வி.ஏ.ஓ., முருகேசன். இவருக்கு இரு நாட்களுக்கு முன் வந்த பட்டா மாறுதல் விண்ணப்பத்தில், அவர் பெயரில் கையெழுத்திட்ட, 'இருவரும் ஒருவரே' என்ற சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சிலருக்கு சான்றிதழில் பெயர் ஒன்றும், அழைக்கப்படும் பெயர் வேறொன்றும் இருக்கும் நிலையில் அதற்காக 'இருவரும் ஒருவரே' என்ற சான்றிதழ் முன்னர் வழங்கப்பட்டது.
நீதிமன்ற தடையால், இந்த சான்றிதழ் தற்போது எங்கும் வழங்கப் படுவது கிடையாது.
அவ்வாறு இருக்கையில், தான் வழங்காத சான்றிதழ் எப்படி, தன் பெயரில் கையெழுத்திட்டு வழங்கப்பட்டது என்பதை கண்டு வி.ஏ.ஓ., முருகேசன் அதிர்ச்சி அடைந்து, சிங்கம்புணரி தாசில்தார் நாகநாதனிடம் புகார் அளித்தார்.
அவரது விசாரணையில், வி.ஏ.ஓ., கையெழுத்தை, கரிசல்பட்டி கிராம உதவியாளர் சின்னையா போலியாக போட்டு இச்சான்று வழங்கியதும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பொன்னமராவதி சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, ஆவணங்கள் பட்டா மாறுதலுக்காக வி.ஏ.ஓ.,விடமே வந்ததும் தெரிந்தது.
சின்னையாவை சஸ்பெண்ட் செய்து, தாசில்தார் உத்தரவிட்டார்.