/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துறைத்தலைவர்-பேராசிரியை சண்டையிடும் வீடியோ வைரல் துறைத்தலைவர்-பேராசிரியை சண்டையிடும் வீடியோ வைரல்
துறைத்தலைவர்-பேராசிரியை சண்டையிடும் வீடியோ வைரல்
துறைத்தலைவர்-பேராசிரியை சண்டையிடும் வீடியோ வைரல்
துறைத்தலைவர்-பேராசிரியை சண்டையிடும் வீடியோ வைரல்
ADDED : செப் 17, 2025 03:55 AM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரும், பேராசிரியை ஒருவரும், கல்லூரியில் போடா, போடி என சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் நடராஜன். அதே துறையில் பேராசிரியையாக பணிபுரிபவர் ராதா. இருவரும் அடிக்கடி கல்லூரியில் சண்டையிடுவது வழக்கம்.
இந்நிலையில் இருவரும் கல்லூரியில் சண்டையிடும் வீடியோ மாணவர்கள் மத்தியிலும் சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது. துறைத்தலைவர், ''நான் உள்ளாடை அணியவில்லை என நீ எதற்காக மாணவர்களிடம் சொல்கிறாய்,'' என பேராசிரியையிடம் சண்டையிட்டு வாடி போடி என சப்தமிடுகிறார். அதை பேராசிரியை வீடியோ எடுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த துறைத்தலைவர், வீடியோ எடுக்கும் பேராசிரியையை தாக்க முயற்சிக்கிறார். நீ அடிடா பாக்கலாம் என அந்த பேராசிரியை சண்டையிட அவர் திட்டிக்கொண்டே அங்கிருந்து செல்கிறார்.
இருவரும் அடிக்கடி சண்டையிடுவதும், பரஸ்பர புகார் தெரிவிப்பதும், அதிகாரிகள் விசாரணையுடன் மவுனமாகிவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.
கல்லூரி முதல்வர் வசந்தி கூறியதாவது:
புதிதாக பொறுப்பேற்றுள்ளேன். பல ஆண்டுகளாக இருவரும் சண்டையிடுவது குறித்து புகார் வந்தது.
தற்போதைய சண்டை குறித்த வீடியோ வந்துள்ளது. விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.