ADDED : மார் 16, 2025 12:38 AM

திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் காரையூர் வி.ஏ.ஓ.வாக சிராவயல் திருநாவுக்கரசு மகன் கணேஷ் கிருஷ்ணகுமார்48, என்பவர் பணியாற்றி வந்தார்.
மார்ச் 13ல் கள ஆய்வுப்பணிக்காக வந்த கணேஷ் கிருஷ்ணகுமார் காலை 11:00 மணி அளவில் காரையூர் அருகே சிங்கம்புணரி ரோட்டில் டூவீலரில் கடந்தார். (ெஹல்மெட் அணியவில்லை.) அப்போது கோயம்புத்தூரிலிருந்து திருக்கோஷ்டியூர் சென்ற கார் மோதியது.
அதில் தலையில் காயமடைந்த கணேஷ் கிருஷ்ணகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.