/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழா உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழா
உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழா
உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழா
உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழா
ADDED : ஜூன் 10, 2025 01:27 AM

திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் நடுவிக்கோட்டை மேலையூர் உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.
நடுவிக்கோட்டை மேலையூர், கூத்தக்குடி, மேல்குடி, கீழையூர் ஆகிய நான்கு கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஜூன் 1ல் காப்புக்கட்டி விழா துவங்கியது.தினசரி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது.
நேற்று ஒன்பதாம் நாளை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்து உலகநாயகி அம்மன் கோயில் வந்தடைந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் அம்மன் திருக்குளத்தைச் சுற்றி திருவீதி உலா நடந்தது.