/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மருத்துவமனை வரும் ரோட்டில் முட்செடிகளால் அவதி சிவகங்கை மருத்துவமனை வரும் ரோட்டில் முட்செடிகளால் அவதி
சிவகங்கை மருத்துவமனை வரும் ரோட்டில் முட்செடிகளால் அவதி
சிவகங்கை மருத்துவமனை வரும் ரோட்டில் முட்செடிகளால் அவதி
சிவகங்கை மருத்துவமனை வரும் ரோட்டில் முட்செடிகளால் அவதி
ADDED : ஜூன் 02, 2025 12:32 AM
சிவகங்கை: சிவகங்கையில், தஞ்சாவூர்- - மானாமதுரை பைபாஸ் ரோட்டில் இருந்து மருத்துவ கல்லுாரிக்கு வரும் ரோட்டில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் அச்சத்தில் தவிக்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 800க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மதுரை, திருப்புத்துார் பகுதியில் இருந்து வாகனங்களில் வருவோர், மருத்துவமனைக்கென தனியாக உள்ள பைபாஸ் ரோடு வழியாக வருகின்றனர். இந்த ரோட்டில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால் இரவில் நோயாளிகள் வரவே அச்சமடைகின்றனர். அதே போன்று இந்த ரோட்டில் மின்விளக்கு வசதியின்றி வழிப்பறி அச்சத்தில் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றுவதோடு, மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.