Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரையில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு சிக்கல்! நீதிமன்றத்தில் தனி நபர் தடையாணை பெற்றதால் இழுபறி

மானாமதுரையில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு சிக்கல்! நீதிமன்றத்தில் தனி நபர் தடையாணை பெற்றதால் இழுபறி

மானாமதுரையில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு சிக்கல்! நீதிமன்றத்தில் தனி நபர் தடையாணை பெற்றதால் இழுபறி

மானாமதுரையில் சிட்கோ தொழிற்பேட்டைக்கு சிக்கல்! நீதிமன்றத்தில் தனி நபர் தடையாணை பெற்றதால் இழுபறி

ADDED : டிச 01, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
மானாமதுரை:

மானாமதுரை அருகே புதிய சிட்கோ தொழிற்பேட்டை துவங்குவதற்கு தனிநபர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரையில் சிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மானாமதுரை அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பணிக்கனேந்தல் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக வருவாய் துறையினர் பட்டா மாறுதல் செய்து சிட்கோவிற்கு இடம் வழங்கிவிட்டனர். இதையடுத்து சிட்கோ நிறுவனத்தினர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மானாமதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் இந்த இடம் தனது அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, சிட்கோ அதிகாரிகளிடம் காண்பித்து, பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், அங்கு தொடர்ந்து சிட்கோ தொழிற்பேட்டை நிறுவுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் அதிருப்யான பாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தனது அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில், அடுத்தவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். நீதிமன்றமும் அவர்கள் இடத்தில் அடுத்தவர்கள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து பனிக்கனேந்தலில் சிட்கோ தொழிற்போட்டை துவக்குவதற்கான பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறியதாவது, சிட்கோ தொழிற்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடம், ஏற்கனவே அசைன்மெண்டாக தான் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தடையானையை விலக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us