/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருச்சி---காரைக்குடி புதிகாக ஒன் டூ ஒன் பஸ் திருச்சி---காரைக்குடி புதிகாக ஒன் டூ ஒன் பஸ்
திருச்சி---காரைக்குடி புதிகாக ஒன் டூ ஒன் பஸ்
திருச்சி---காரைக்குடி புதிகாக ஒன் டூ ஒன் பஸ்
திருச்சி---காரைக்குடி புதிகாக ஒன் டூ ஒன் பஸ்
ADDED : ஜூன் 12, 2025 10:50 PM
காரைக்குடி; காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு புதிதாக ஒன் டூ ஒன் பஸ்சும், 3 புதிய டவுன் பஸ்களும் நேற்று முதல் இயக்கப்பட்டது.
காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு புதுக்கோட்டை வழியாக ஒன் டூ த்ரீ பஸ் இயக்கப்படுகிறது. காரைக்குடி டூ திருச்சிக்கு இடைநில்லா பஸ் இயக்க தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டது.
அதன் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று புதிதாக காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு ஒன் டு ஒன் பஸ் இயக்கம் தொடங்கப்பட்டது.
காரைக்குடியிலிருந்து காலை 6:35க்கும், 11:40க்கும் மாலை 5:10க்கும் திருச்சிக்கு செல்கிறது. திருச்சியில் இருந்து காலை 9:07 க்கும் மதியம் 2:07 க்கும் இரவு 8:15க்கும் காரைக்குடிக்கு வருகிறது.
அதேபோல், கடியாபட்டி ராயபுரம் கீழச்சீவல்பட்டிக்கு சென்று வந்த பழைய டவுன் பஸ்சிற்கு மாற்றாக புதிய டவுன் பஸ் இயக்கப்பட்டது. தொடக்க விழாவில் மாங்குடி எம்.எல்.ஏ., மேயர் முத்துத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் முதல் பெண் கண்டக்டராக பனிமலர், கடியாபட்டி பஸ்சில் பணியை துவக்கினார்.