காரைக்குடி வழியாக அயோத்திக்கு ரயில்
காரைக்குடி வழியாக அயோத்திக்கு ரயில்
காரைக்குடி வழியாக அயோத்திக்கு ரயில்
ADDED : ஜன 04, 2024 02:08 AM
காரைக்குடி: நாகர்கோயிலில் இருந்து அயோத்திக்கு செல்லும் சிறப்பு ரயிலை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக இயக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.நாகர்கோயிலில் இருந்து அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி,பட்டுக்கோட்டை திருவாரூர் சென்னை வழியாக ரயிலை இயக்க வேண்டும் என கிழக்கு கடற்கரை ரயில்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், அயோத்திக்கு தெற்கு ரயில்வே சார்பில் சென்னை நாகர்கோவில் மதுரை கோயம்புத்தூர் திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விரைவு ரயில் செல்கிறது.இதில் நாகர்கோயிலில் இருந்து அயோத்தி செல்லும் விரைவு ரயிலை நாகர்கோயில் திருநெல்வேலி விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை சிவகங்கை காரைக்குடி பேராவூரணி பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி மயிலாடுதுறை கடலுார் விழுப்புரம் சென்னை வழியாக இயக்க வேண்டும். இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் திருச்சி மதுரை கோட்ட ரயில்வே டிஆர்எம் ஆகியோருக்கு தெரிவிக்க உள்ளோம் என்றார்.