ADDED : ஜூன் 23, 2025 11:46 PM
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் 39 வயது பெண். இவர் நாட்டரசன்கோட்டையில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவரை அதே பகுதியை சேர்ந்த சங்கிலி மகன் சுந்தரேஸ்வரன் 29 என்பவர் அடிக்கடி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
அந்த பெண் தாலுகா போலீசில் தன்னை அருவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக புகார் அளித்தார். போலீசார் சுந்தரேஸ்வரனை கைது செய்தனர்.