/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 10, 2025 01:24 AM

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா ஒன்பதாம் நாளை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக விழா ஜூன் 1 அன்று கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
9ம் நாளான நேற்று காலை 9:43 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளினார்.சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தேர் வடக்கொடிகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேரில் பொருத்தினர். அனைத்து பக்தர்களும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நேற்று காலை 10:05 மணிக்கு துவங்கியது.
தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து காலை 11:30 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு 7:00 மணிக்கு கண்ணுடையநாயகி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்தார்.
இன்று பால்குடம், பூக்குழி
விழாவின் பத்தாம் நாளான இன்று காலை 8:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்துகின்றனர். பதினொன்றாம் நாளான நாளை காலை உற்ஸவ சாந்தி, மாலை வெள்ளி ஊஞ்சல் உற்ஸவத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.