/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருவேங்கடமுடையான் கோயில் தெப்ப உற்ஸவம் திருவேங்கடமுடையான் கோயில் தெப்ப உற்ஸவம்
திருவேங்கடமுடையான் கோயில் தெப்ப உற்ஸவம்
திருவேங்கடமுடையான் கோயில் தெப்ப உற்ஸவம்
திருவேங்கடமுடையான் கோயில் தெப்ப உற்ஸவம்
ADDED : ஜூன் 15, 2025 11:47 PM

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்ப உற்ஸவ விழா நடந்தது.
தென்திருப்பதி அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார். ஜூன் 8 திருக்கல்யாணமும், ஜூன் 11 ல் தேரோட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்ஸவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான் எழுந்தருளினார். தெப்பம் மூன்று முறை வலம் வந்துது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று புஷ்ப பல்லக்கு, விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெற்றது. பரம்பரை அறங்காவலர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் விநாயகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.