ADDED : ஜூன் 19, 2025 02:44 AM
தேவகோட்டை: தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகர் ஸ்வர்ண பைரவர் கோயிலில் ஆனி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.பைரவருக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தன. முன்னதாக அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை நடந்தன.
தேவகோட்டை ஆதர்ஷண பைரவர், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலிலும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.