/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையில் திருட்டு சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையில் திருட்டு
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையில் திருட்டு
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையில் திருட்டு
சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் வாரச்சந்தையில் திருட்டு
ADDED : செப் 20, 2025 11:47 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரில் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்பேரூராட்சியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை அடுத்தடுத்து அமைந்துள்ளது. வியாழக்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதால் சில வாரங்களாக இந்த இரண்டு இடங்களிலும் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.
நெரிசலை பயன்படுத்தி வெளியூரில் இருந்து வந்து இங்கு முகாமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே பஸ் ஸ்டாண்டில் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், வாரச்சந்தை பஸ் ஸ்டாண்டிற்குள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.