/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய ரோடுகள் கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய ரோடுகள்
கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய ரோடுகள்
கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய ரோடுகள்
கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயிலால் வெறிச்சோடிய ரோடுகள்
ADDED : ஜூன் 11, 2025 07:29 AM

மானாமதுரை : மானாமதுரை,இளையான்குடி பகுதியில் கத்திரி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில் கொடுமையால் பகலில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகத்தில் கோடை வெயில் கடந்த 2 மாதங்களாக அடித்து வந்த நிலையில் கத்திரி வெயிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இருப்பினும் மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் கத்திரி வெயில் காலத்தில் அடித்த வெயிலை விட தற்போது மிக கடுமையாக வெயில் அடித்து வருவதினால் மக்கள் புழுக்கம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிவகங்கையில் இருந்து இளையான்குடி செல்லும் ரோடு, மானாமதுரை ரோடுகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கின்ற நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் கடும் வெயில் அடிப்பதால் ரோடுகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இது போன்ற பிரச்னையை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டோரங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.