ADDED : ஜூன் 21, 2025 12:20 AM
கீழடி: கீழடி அருகே காஞ்சிரங்குளத்தில் முயல் வேட்டைக்கு சென்றவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் நல்லூரைச் சேர்ந்தவர் வீரமுத்து 45, நள்ளிரவில் முயல் வேட்டைக்குச் சென்றவர் நான்கு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று முன் தினம் மனைவி ராதிகா மற்றும் உறவினர்கள் தேடிச் சென்ற போது காஞ்சிரங்குளம் வயல் வெளியில் உயிரிழந்து கிடந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.