Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தற்காலிக சமையல் உதவியாளர்களுக்கு ஊதியம்... நிறுத்தம்: ஆசிரியர், அமைப்பாளர்களின் தலையில் சுமை

தற்காலிக சமையல் உதவியாளர்களுக்கு ஊதியம்... நிறுத்தம்: ஆசிரியர், அமைப்பாளர்களின் தலையில் சுமை

தற்காலிக சமையல் உதவியாளர்களுக்கு ஊதியம்... நிறுத்தம்: ஆசிரியர், அமைப்பாளர்களின் தலையில் சுமை

தற்காலிக சமையல் உதவியாளர்களுக்கு ஊதியம்... நிறுத்தம்: ஆசிரியர், அமைப்பாளர்களின் தலையில் சுமை

ADDED : செப் 13, 2025 03:58 AM


Google News
Latest Tamil News
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 43,131 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையத்திலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பணியிடங்கள் உள்ள நிலையில் பல மாதங் களாக சமையலர், உதவி யாளர் காலிப் பணி யிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளது. இதனால் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்க சத்துணவு அமைப் பாளர்கள் சிரமப் படுகின்றனர்.

தற்காலிக நடவடிக்கை யாக அந்தந்த பள்ளிகள் உள்ள ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சமையல் பணிக்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்பட்ட னர். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் மாற்றப்பட்டு, அவர் களுக்கு வேலை உறுதித் திட்டத்திலேயே அதி காரிகள் ஊதியம் வழங்கினர்.

இந்நிலையில் சிங்கம் புணரி, எஸ்.புதுார் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்படி பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர் களுக்கு வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் வழங்கக் கூடாது என தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அவர்களுக்கான சம்பளம் கேள்விக் குறியானது.

தமிழகம் முழுவதும் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப சமூகநலத்துறை உத்தரவிட்ட நிலையில் ஏப்., மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் 5 மாதங்களைக் கடந்தும் இன்னும் அவர்கள் பணியமர்த்தப்படாததால், ஏற்கனவே வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய அதே நபரைக் கொண்டு சமையல் பணி நடக்கிறது.

அவர்களுக்கான ஊதியத்தை வேலை உறுதி திட்டத்தில் கொடுக்க முடியாததால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும், சத்துணவு அமைப்பாளர்களும் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளது. ஏற் கனவே பள்ளியில் துப் புரவு பணியாளர் ஊதியம் உள்ளிட்ட கூடுதல் செலவு களை ஆசிரியர்கள் கவனித்து வரும் நிலையில் இது அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

எனவே சமையல் உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அதுவரை பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியத்திற்கு மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், சத்துணவு அமைப்பாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us