Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 13, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நடுவிக்கோட்டை மேலையூரில் மல்லன் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

மல்லன் கருப்பர், பெரியகருப்பர்,சின்னக்கருப்பர், தொட்டிச்சி, சன்னாசி, ராக்கச்சி, செட்டிச்சி, முன்னோடி சன்னதிகளுக்கு திருப்பணி நடந்து கோயில் முன் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கின.

மாலையில் முதற்கால யாகபூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது.

பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடானது. கோயிலை வலம் வந்த கலசங்கள் கோபுரம், விமானத்திற்கு சென்றது.

தொடர்ந்து காலை 10:21 மணிக்கு தொடர்ந்து சிவாச்சாரியாரால் கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us