ADDED : ஜூன் 24, 2024 01:40 AM
சிவகங்கை : சிவகங்கையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில துணை பொது செயலாளர் அப்துல்ரகீம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அல்அமீன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆசீப் முகமது, செயலாளர் அப்துல் சித்திக், பொருளாளர் முகமது இஸ்மாயில், துணை தலைவர் ஹனிபா, துணை செயலாளர்கள் சிகாபுதீன், முகமது, ஹாரிஸ், மாணவரணி செயலாளர் அசார், மருத்துவரணி வருசை முகமது, தொண்டரணி ஹாரூன் உள்ளிட்டோர் தேர்வாகினர். கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள், அரசியல்களை உடனே கைது செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடுபடி கிடைத்த கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்க வெளியிட வேண்டும் என தீர்மானித்தனர்.