/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட ஆய்வு மானாமதுரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட ஆய்வு
மானாமதுரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட ஆய்வு
மானாமதுரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட ஆய்வு
மானாமதுரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட ஆய்வு
ADDED : மே 12, 2025 12:39 AM

மானாமதுரை,: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக ட்ரோன்கள் மூலம் ஆய்வு நடந்தது.
ராமநாதபுரம் மெயின் ரோட்டில் அமைந்த இந்த ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 25 முறைக்கும் மேல் அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு நாட்களாக புனேவைச் சேர்ந்த மோனர்ச் நில அளவை, பொறியியல் ஆலோசனை, திட்டமிடல், கட்டுமான மேற்பார்வை செய்து வரும் நிறுவனம் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளிலிருந்து 4 பக்கமும் 500 மீட்டர் தொலைவில் 80 மீட்டர் உயரத்தில் லைடார் ட்ரோன் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நிலத்தின் தன்மை மற்றும் சூழல்களை ஆய்வு செய்து வருகிறது.