/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காளையார்கோவில் எஸ்.ஐ.,துாக்கிட்டு தற்கொலை காளையார்கோவில் எஸ்.ஐ.,துாக்கிட்டு தற்கொலை
காளையார்கோவில் எஸ்.ஐ.,துாக்கிட்டு தற்கொலை
காளையார்கோவில் எஸ்.ஐ.,துாக்கிட்டு தற்கொலை
காளையார்கோவில் எஸ்.ஐ.,துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 23, 2025 03:39 AM

சிவகங்கை : காளையார்கோவில் எஸ்.ஐ., பணி நேரத்தில் போலீஸ் குடியிருப்பில் சீருடையுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் வெள்ளைச்சாமி மகன் ராஜ்குமார் 53. இவர் காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். கடந்த இரண்டு ஆண்டாக கீழச்செவல்பட்டியில் பணிபுரிந்தார். கடந்த மாதம் தான் பணிமாறுதலில் காளையார்கோவில் வந்தார். மே 12 முதல் 17 வரை விடுப்பில் இருந்தார்.
தனது 17 வயது மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் மனவேதனையில் இருப்பதாகவும் தனக்கு விருப்ப ஓய்வு தரும்படியும் இரண்டு தினங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ராஜ்குமார் நேற்று மதியம் பணிக்கு வரவில்லை. சகபோலீசார் போன் செய்தனர். அலைபேசியை எடுக்காததால் அவரை தேடினர்.
அவர் ஸ்டேஷன் எதிரே போலீஸ் குடியிருப்பில் உள்ள அறையில் சீருடையுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் தலைமையிலான போலீசார் ராஜ்குமார் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.