ADDED : செப் 12, 2025 04:25 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருச்சிக்கு ரயில் நேற்று மதியம் 3:15 மணிக்கு புறப்பட்டது.
கண்டனுார் சாலை அருகே ரயில் சென்ற போது ரயில் முன்பு இளைஞர் ஒருவர் விழுந்தார். ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார், ரயிலில் சிக்கி உயிழந்தவரின் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.