/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள் மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்
மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்
மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்
மழைக்கு ஒழுகும் கட்டடத்தில் மாணவர்கள்
ADDED : செப் 16, 2025 04:23 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் மழைக்கு ஒழுகும் ஓட்டு கட்டடத்தில் வகுப்பறை நடப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுகின்றனர்.
இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 8 வகுப்புகள் உள்ள நிலையில் கான்கிரீட் கட்டடம் பற்றாக்குறையாக உள்ளதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் 2 வகுப்பு நடத்தப்படுகிறது. இக்கட்டடத்தின் கூரை மழைக்காலங்களில் ஒழுகுகிறது. உள்ளே அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பழைய ஓட்டு கட்டடத்திற்கு பதிலாக புதிய கான்கிரீட் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.