ADDED : ஜூன் 14, 2025 11:48 PM
காரைக்குடி: காரைக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் பாலு. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவரை அருகில் உள்ள டியூஷன் சென்டரில் சேர்த்துள்ளனர். மாணவர் டியூசனுக்கு செல்லாமல் இருந்ததை அவரது தாய் கண்டித்துள்ளார். விரத்தி அடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.