/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விழா காலங்களில் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்விழா காலங்களில் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழா காலங்களில் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழா காலங்களில் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
விழா காலங்களில் போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : ஜன 26, 2024 05:30 AM

காரைக்குடியில் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மதுரை திருச்சி தஞ்சாவூர் ராமநாதபுரம் திருச்செந்துார் பழநி திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
தைப்பூசத் திருநாளான நேற்று பழநி திருப்பரங்குன்றம் குன்றக்குடி திருச்செந்துார் உட்பட பல்வேறு முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் சென்றனர். பழநிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், தைப்பூசம், குடியரசு தினம் என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களும் வெளியூர் செல்ல பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டனர். மதுரை, ராமநாதபுரம் இளையான்குடி காளையார் கோயில் கல்லல் அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு பயணிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.
பயணிகள் கூறுகையில்:
விழா காலங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சிறப்பு பேருந்து அதிகம் இயக்கப்படுகிறது. ஆனாலும் பிற பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய பஸ் இல்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்து கிடக்கும் சூழல் நிலவியது. போதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


