/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி
அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி
அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி
அண்டக்குடியில் தேங்கி கிடக்கும் கழிவு நீர் * சாய்ந்த மின்கம்பத்தால் அவதி
ADDED : ஜூன் 23, 2025 07:32 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே அண்டக்குடி புதூர் பூங்கா நகரில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தாலும், தேங்கி கிடக்கும் கழிவு நீரால் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை மக்கள் புகார் தெரிவித்துவிட்டனர். அதற்கு பின்னரும் மின் கம்பத்தை சீரமைக்க மின் ஊழியர்கள் முன்வரவில்லை. அதே போன்று பூங்கா நகரில் உள்ள ரோட்டை ஒட்டி கழிவுநீர் செல்லும் பாதையை சிலர் அடைத்து வைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அச்சம் நிலவுகிறது. ஊராட்சி ஒன்றிய, மின்வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
//