ADDED : செப் 05, 2025 11:43 PM
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. டாக்டர் காவியா சரத் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஸ்டெல்லா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியை விமலா அறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். பள்ளி முகவாண்மை குழு தலைவர் கண்ணப்பன், பள்ளி செயலர் நாகராஜன், மேலாளர் சுப்பையா, ஆடிட்டர் கண்ணப்பன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கரிகாலன் நன்றி கூறினார்.