/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ேஷர் ஆட்டோக்கள் தொல்லை திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ேஷர் ஆட்டோக்கள் தொல்லை
திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ேஷர் ஆட்டோக்கள் தொல்லை
திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ேஷர் ஆட்டோக்கள் தொல்லை
திருப்புவனம் பஸ் ஸ்டாப்களில் ேஷர் ஆட்டோக்கள் தொல்லை
ADDED : ஜூன் 21, 2025 12:10 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப்களில் தொடர்ச்சியாக ஷேர் ஆட்டோக்கள்நிறுத்தப்படுவதால் பயணிகள் பஸ்களில் ஏறி இறங்க சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள அல்லிநகரம், மடப்புரம், லாடனேந்தல்உள்ளிட்ட கிராமமக்கள்மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம் செல்ல திருப்புவனம் வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர்.
திருப்புவனத்தில் மானாமதுரை, நரிக்குடி விலக்கு, சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இதுதவிர வெள்ளி, செவ்வாய், ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளை ஏற்றுவதற்காக ஷேர் ஆட்டோக்களை பஸ் ஸ்டாப்களில் வரிசையாக நிறுத்துகின்றனர். இதனால் பஸ்களில் மக்கள் ஏறி, இறங்க முடிவதில்லை.
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாப்பை ஒட்டி இருபுறமும் நீண்டவரிசையில் ஷேர் ஆட்டோக்கள் பிற வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் பஸ் ஏறுவது மக்களுக்கு சவாலாகவே உள்ளது. பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் பஸ் ஸ்டாப்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.