ADDED : ஜூன் 17, 2025 11:25 PM
காரைக்குடி: காரைக்குடி தேவர் சிலை எதிரே உள்ள டீ கடை ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்தது. டீ குடிக்க நின்றவர்கள் பாம்பு கடைக்குள் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பாம்பை விரட்ட முடியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கடைக்குள் மறைந்திருந்த கண்ணாடி விரியன் ரக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.