ADDED : ஜன 22, 2024 05:04 AM
சிவகங்கை: காரைக்குடி அருகே புதுவயல் ரயில்வே கேட்டில் 470 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து, இருவரை கைதுசெய்தனர்.
குடிமை பொருள் குற்ற தடுப்பு பிரிவு எஸ்.ஐ., சிவபிரகாசம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் காரில் 470 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த புதுவயல் முகமது கனி மகன் முகமது ரபீக் 48, நயினாமுகமது மகன் ரபீக் முகமது 36 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


