/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் குறுந்தகவல்; மாநில அளவில் விசாரணை ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் குறுந்தகவல்; மாநில அளவில் விசாரணை
ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் குறுந்தகவல்; மாநில அளவில் விசாரணை
ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் குறுந்தகவல்; மாநில அளவில் விசாரணை
ரேஷனில் பொருள் வாங்காத கார்டுக்கும் குறுந்தகவல்; மாநில அளவில் விசாரணை
ADDED : மே 16, 2025 07:11 AM
சிவகங்கை : ரேஷன் கடைகளில் பொருட்களே வாங்காத கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணுக்கு பொருள் வாங்கியதாக குறுந்தகவல் செல்வதாக எழுந்த புகாரின் பேரில், மாநில அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பண்டகசாலை மூலம் 35 ஆயிரத்து 83 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகள் மூலம் 2 கோடியே 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். இலவசமாக அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
பொருட்கள் வாங்கிய விபரங்கள் அந்தந்த ரேஷன் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது. சில இடங்களில் பொருட்களே வாங்காத நிலையில் அலைபேசிக்கு வாங்கியதாக குறுந்தகவல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் பில்லிங்' மெஷின் மூலமாக தான் விற்பனை நடக்க வேண்டும். ஆனால், 25 சதவீதம் விற்பனை பில்லிங் மெஷின் இன்றி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட வழங்கல், வட்ட வழங்கல் அலுவலர் மூலம் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணை அழைத்து மாநில அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றனர்.


