ADDED : செப் 22, 2025 03:46 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எம்.கோவில்பட்டி பழனியப்பன் மகள்கள் கவிப்பிரியா 17, சாதனா 18. செப்., 5 ல் இருவரும் பால் வாங்க டூவீலரில் சென்றபோது, அரசு பஸ் மோதி விபத்திற்குள்ளானது.
இந்தவிபத்தில் சம்பவ இடத்திலேயே சாதனா பலியானார். காயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கவிப்பிரியாவும் உயிரிழந்தார்.
நேற்று அவர்களது வீட்டிற்கு சென்ற அமைச்சர் பெரியகருப்பன், தனது சொந்தநிதியில் ரூ.6 லட்சத்தை பழனியப்பனிடம் வழங்கி, ஆறுதல் கூறினார். சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, ஒன்றிய துணை செயலாளர் சேகர், அயலக அணி புகழேந்தி பங்கேற்றனர்.