/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுமருதுார் பள்ளி மாணவர்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுமருதுார் பள்ளி மாணவர்கள்
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுமருதுார் பள்ளி மாணவர்கள்
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுமருதுார் பள்ளி மாணவர்கள்
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுமருதுார் பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 22, 2025 05:06 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் வையாபுரிபட்டி ஊராட்சி சிறுமருதுார் அரசு நடுநிலைபள்ளியில் 8ம் வகுப்பு வரை 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
இங்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டடமும், 35 ஆண்டுகளுக்கு முன் இரண்டு வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட ஒரு கான்கிரீட் கட்டடமும் மட்டுமே உள்ளது. ஓட்டுக் கட்டடம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், பழைய கான்கிரீட் கட்டடத்தில் வகுப்பு நடக்கிறது.
இப்பள்ளிக்கு ஹைடெக் லேப் வழங்கப்பட்டு 10 கம்ப்யூட்டர்களும் இதே கட்டடத்தில்தான் வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நெருக்கடியில் தவிக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை பிரித்து வைத்து பாடம் நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஓட்டு கட்டடத்தை இடித்து விட்டு மூன்று வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டித் தர பெற்றோர்கள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை ஓட்டு கட்டடம் இடிக்கப்படவும் இல்லை. புதிய கட்டடம் வரவும் இல்லை. இதனால் தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இட நெருக்கடியில் அருகருகே அமர்ந்து பாடங்களை படிக்கும் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.
எனவே பழைய ஓட்டு கட்டடத்தை இடித்துவிட்டு மூன்று வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.