/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரி குவாரி விபத்து பலியானோர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வருமா பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு சிங்கம்புணரி குவாரி விபத்து பலியானோர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வருமா பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு
சிங்கம்புணரி குவாரி விபத்து பலியானோர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வருமா பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு
சிங்கம்புணரி குவாரி விபத்து பலியானோர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வருமா பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு
சிங்கம்புணரி குவாரி விபத்து பலியானோர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வருமா பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 04, 2025 12:57 AM
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் குவாரி பாறை சரிந்த விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு தொழிலாளர் நல வாரியம், வருங்கால வைப்பு நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் குவாரியில் மே 20 அன்று பாறைக்கு வெடி வைப்பதற்காக குழி தோண்டும் போது பாறை சரிந்தது.
பாறைக்குள் சிக்கி ஓடைப்பட்டி முருகானந்தம் 49, இ.மலம்பட்டி ஆறுமுகம் 65, ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி கணேசன் 43, துாத்துக்குடி எட்டயபுரம் மைக்கேல்ராஜ் 43, பொக்லைன் டிரைவர் ஓடிசா ஹர்ஜித் 28, ஆகிய 6 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு, அமைச்சர், குவாரி தரப்பில் நிவாரண நிதியாக தலா நபருக்கு ரூ.10.50 லட்சம் வரை வழங்கப்பட்டது. எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குவாரியில் நடத்திய விசாரணையில் 55 ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால (இ.பி.எப்.ஓ.,) வைப்பு நிதி, தொழிலாளர் (இ.எஸ்.ஐ.,) காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் பதிவு செய்யாத ஊழியர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தாக வேண்டும்.
அப்படி பதிவு செய்தவர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் மூலம் பணியிடை விபத்து மரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
அதே போன்று காப்பீடு நிறுவனம் மூலமும் (இ.எஸ்.ஐ.,) இழப்பீடு தொகையை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.