ADDED : செப் 04, 2025 04:26 AM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள செய்யானேந்தலில் தங்கி ஆரோக்கியசாமி என்பவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். அவரிடம் 20 ஆடுகள் உள்ளன.
10 ஆடுகளை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கோட்டை டோல்கேட் அருகே மேய்த்து கொண்டு இருந்தார். ஆடுகள் ரோடு அருகே பள்ளத்தில் மேய்ந்த போது அருகில் கிடந்த தண்ணீரை ஆடுகள் குடித்து உள்ளன. மதியம் 3:00 மணியளவில் ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்தன.
கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் ஆறு ஆடுகள் இறந்து போயின. சம்பவ இடத்திலேயே டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார். டி.எஸ்.பி. கவுதம், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.