ADDED : மார் 20, 2025 06:06 AM
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி இயற்பியல் துறை சார்பில் இந்தியா காலநிலை அறிவியலை எதிர்த்து போராடுமா எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் ஜபருல்லாகான் தலைமையில் நடந்தது.
துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்.தமிழ்நாடு அறிவியல் கழக முன்னாள் தலைவர் தினகரன்,மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, தலைவர் சாஸ்தா சுந்தரம் பேசினர். உதவி பேராசிரியர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.