பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் மாநில அளவிலான உள்தர நிர்ணயம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை பற்றிய கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் அசோக் தலைமை வகித்தார். முதல்வர் விசுமதி வரவேற்றார். இந்திய இயந்திர காப்புரிமை அலுவலக அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் புதிய கண்டுபிடிப்புகளின் காப்புரிமை குறித்து விளக்கம் அளித்தார். ஒருங்ணைப்பாளர் சத்யபிரியா நன்றி கூறினார்.