/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பரிதவிப்பு திருப்புவனத்தில் மேய்ச்சல் நிலம் குறைவால் வைக்கோலும் தட்டுப்பாட்டால் கவலைபரிதவிப்பு திருப்புவனத்தில் மேய்ச்சல் நிலம் குறைவால் வைக்கோலும் தட்டுப்பாட்டால் கவலை
பரிதவிப்பு திருப்புவனத்தில் மேய்ச்சல் நிலம் குறைவால் வைக்கோலும் தட்டுப்பாட்டால் கவலை
பரிதவிப்பு திருப்புவனத்தில் மேய்ச்சல் நிலம் குறைவால் வைக்கோலும் தட்டுப்பாட்டால் கவலை
பரிதவிப்பு திருப்புவனத்தில் மேய்ச்சல் நிலம் குறைவால் வைக்கோலும் தட்டுப்பாட்டால் கவலை
ADDED : ஜன 28, 2024 06:25 AM

திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் மேய்ச்சல் நிலம் குறைந்து வருவதால் கால்நடை வளர்ப்போர் பரிதவித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. மணல்மேடு, பெத்தானேந்தல், திருப்பாச்சேத்தி, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் நெல் விவசாயமும் தாமதமாக தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் தான் நெல் பயிரிட தொடங்கியுள்ளனர்.
வைகை ஆற்றில் நீர்வரத்து காரணமாக கண்மாய்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. கால்நடை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் வயல்கள், கண்மாய் கரை, அரசு புறம்போக்கு நிலங்களில் மேய விடுவது வழக்கம். கறவை மாடுகளுக்கு மட்டும் தான் வீடுகளிலும் புண்ணாக்கு, பருத்தி கொட்டை உள்ளிட்டவை வழங்கப்படும், மற்றபடி மேய்ச்சலுக்கு சென்றால் தான் கால்நடைகளுக்கு உணவு கிடைக்கும், விவசாயப்பணிகள் நடப்பதாலும் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட முடியாமல் விவசாயிகள் நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள இடங்கள், சென்டர் மீடியனில் வளர்ந்துள்ள புற்கள் ஆகியவற்றில் மேய விடுகின்றனர்.
விவசாயிகள் வைக்கோல் உள்ளிட்டவற்றை வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விடுவதால் கால்நடை வளர்ப்போர்களுக்கு வைக்கோலும் கிடைப்பதில்லை. ஓரு ஏக்கரில் விளையும் வைக்கோலும் நான்காயிரத்திற்கும் மேல் விற்பனை செய்வதால் கால்நடை வளர்ப்போர் பரிதவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் குறைவால் கால்நடைகளை விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கால்நடை வளர்ப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.