/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துாய்மை பணியாளர்கள் காரைக்குடியில் போராட்டம் துாய்மை பணியாளர்கள் காரைக்குடியில் போராட்டம்
துாய்மை பணியாளர்கள் காரைக்குடியில் போராட்டம்
துாய்மை பணியாளர்கள் காரைக்குடியில் போராட்டம்
துாய்மை பணியாளர்கள் காரைக்குடியில் போராட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:09 AM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி மாநகராட்சியில் 100 க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாளர்கள் கடன் பெற்றுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் கடனை செலுத்தி வந்தது. 5 மாதங்களாக, பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்தும், கடன் தொகையை மாநகராட்சி செலுத்தவில்லை எனக்கூறி, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில்: 5 மாதமாக சம்பளத்தில் பிடித்தம் செய்தும் கூட்டுறவு சங்கத்தில் கடன் தொகையை மாநகராட்சி நிர்வாகம் செலுத்தவில்லை. முறையான தகவலும் இல்லை.
கூட்டுறவு சங்கம், வட்டியுடன் பணத்தை கட்ட சொல்கிறது. மேலும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., தொகையில் கடன் கேட்டாலும் கொடுப்பதில்லை.
தவிர, துாய்மை பணியாளர்களுக்கு கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை. சங்கராபுரத்தில் 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துகின்றனர் என்றனர்.