ADDED : செப் 04, 2025 04:24 AM
மானாமதுரை: பெரியகோட்டை உப்பாற்று பகுதியில் கடந்த சில வாரங்களாக மணல் திருட்டு நடைபெற்று வருவதாக வந்த புகாரை அடுத்து மானாமதுரை சிப்காட் போலீசார் உப்பாற்று பகுதியில் ரோந்து சென்ற போது போலீசாரை கண்டவுடன் மணல் அள்ளியவர்கள் வாகனங்களை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர்கள் சிவகங்கை அருகே உள்ள சுந்தரம் நடப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 35, இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் 22, 2 பேரை கைது செய்து வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.