/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைக்க ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு லாரியில் கிராவல் மண் எடுக்க தடை டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைக்க ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு லாரியில் கிராவல் மண் எடுக்க தடை
டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைக்க ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு லாரியில் கிராவல் மண் எடுக்க தடை
டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைக்க ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு லாரியில் கிராவல் மண் எடுக்க தடை
டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைக்க ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு லாரியில் கிராவல் மண் எடுக்க தடை
ADDED : ஜூலை 02, 2025 07:26 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே டி.புதுார் புதுக்கண்மாய் சீரமைப்பு பணியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், சிவகங்கை அருகே டி.புதுார் முனீஸ்வரர் கோயில் அருகே புதுக்கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாய் வடக்கு கரையோரம் 2 அடி ஆழத்திற்கு கிராவல் மண் எடுத்து, கரையை பலப்படுத்தும் நோக்கில் சிறுபாசன கண்மாய் புத்துயிரூட்டும் திட்டத்தின் கீழ் ரூ.4.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில், டி.புதுார் புதுக்கண்மாயில் வளர்ந்துள்ள முட்செடிகளை முற்றிலுமாக அகற்றிவிட வேண்டும்.
மேலும், கண்மாய் வடக்கு கரையில் டி.புதுார் சமுதாயக்கூடம் முதல் சூரக்குளம் ரோடு சந்திப்பு வரை 2 அடி ஆழத்திற்கு கரையை ஓட்டி கிராவல் மண் எடுத்து, அவற்றை அப்படியே கரையில் கொட்டி கரையை பலத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
டி.புதுார் புதுக்கண்மாயில் கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன.
இதில், இரவில் இக்கண்மாயில் இருந்து லாரிகள் மூலம் கிராவல் மண் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கண்மாய் மண் எடுக்க அனுமதியில்லை
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் கொங்கேஸ்வரன் கூறியதாவது, டி.புதுார் புதுக்கண்மாய் வடக்கு கரைக்கு உட்பகுதியில் 2 அடி ஆழத்திற்கு மட்டுமே மண்ணை எடுத்து அப்படியே வடக்கு கரை முழுவதும் போட்டு, கண்மாயை பலப்படுத்த மட்டுமே டெண்டர் விட்டுள்ளோம்.
லாரிகளில் கிராவல் மண்ணை வெளியே எடுத்து செல்ல அனுமதியில்லை, என்றார்.