/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிள்ளையார்பட்டியில் ரூ 4.3 கோடியில் அன்னதானக் கூடம் பிள்ளையார்பட்டியில் ரூ 4.3 கோடியில் அன்னதானக் கூடம்
பிள்ளையார்பட்டியில் ரூ 4.3 கோடியில் அன்னதானக் கூடம்
பிள்ளையார்பட்டியில் ரூ 4.3 கோடியில் அன்னதானக் கூடம்
பிள்ளையார்பட்டியில் ரூ 4.3 கோடியில் அன்னதானக் கூடம்
ADDED : செப் 13, 2025 04:02 AM
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயில் அருகில் கோயில் நிதியில் ரூ 4.3 கோடி மதிப்பிலான அன்னதான கூடம் கட்டுவது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
பிள்ளையார்பட்டி வந்த அமைச்சரை கோயில் அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்ப செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் வரவேற்றனர். தொடர்ந்து பிச்சைக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் மரியாதை செலுத்தப்பட்டது. மருதங்குடி ரோடு அருகில் கோயில் நிதியில் ரூ.4.3 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அமையும் இடத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் பணியை துவக்கி ஒரு ஆண்டிற்குள் பணியை நிறைவு செய்யவும்,சமையலறை தனித்தனியாக கட்டவும், சரியான மதிப்பீடு நிர்ணயிக்கவும் அறநிலையத் துறை இணை ஆணயர் பாரதி, செயற்பொறியாளர் சிவராணி, உதவி செயற்பொறியாளர்கள் சேது, முரளிதரன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் அமைக்க நிதி ஒதுக்கியதற்கு பாராட்டும், கற்பக விநாயகரின் பழைய தேரை மாற்றி புதுத்தேருக்கு நிதி ஒதுக்கவும் அமைச்சரிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது.